புகார் அளித்த 3 நாளில் தீர்வு
பிக்கிலி ஊராட்சியில் ஜூன் 15 அன்று கொடுத்த புகார்
பிக்கிலி ஊராட்சியில் மூன்று இடங்களில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள வழியில் மின்சார கம்பங்கள் உடைந்து காணப்பட்ட கம்பங்கள் தற்போது சரிசெய்யப்பட்டது
படம் 1 : பிக்கிலி ஊராட்சி மலையூர் 12 வது வார்டு வடக்கு வீதி மாரியம்மன் கோவில் அருகில்.
படம் 2 : பிக்கிலி அரசு துவக்கப்பள்ளி பின் புறம்.
படம் 3 : பிக்கிலி புதூர் மாரியம்மன் கோவில் அருகில்.
👇👇👇👇👇👇👇
பல நாட்களாக பழுதாகி மக்கள் நடமாடும் கோவில் அருகிலும் பள்ளி அருகிலும் மின் இணைப்பு சிமெண்ட் கம்பங்கள் உடந்துள்ளதை பிக்கிலி ஊராட்சி மலையூர் வார்டு உறுப்பினர் திருமதி புவனேஸ்வரி அவர்களும் கோபால்சாமி நாடக கலை குழு மேனேஜரும் ஜி.சின்னசாமி அவர்களும் அதேபோல் பிக்கிலி சார்ந்த சமூக அக்கறையாளர் இளைஞர்கள் விஜயகுமார் அவர்களும் பழுதான கம்பத்தின் புகைப்படங்களுடன் பிக்கிலி_ஊராட்சி_மக்கள்_வளர்ச்சி_சங்கத்தின் பார்வைக்கு கொண்டு வரும் பட்சத்தில் அதனை வேலூர் மண்டல மின் பகிர்மான பொறியாளர் பார்வைக்கு நியூஸ்7 ரிப்போர்ட்டர் அவரின் துணையோடு கொண்டு சென்றோம்
ஜூன் 19 ம் தேதி அன்றே சரி செய்யப்பட்டது அதிகாரிகளிடம் பிரச்சனையை கொண்டு செல்வது நம் முக்கிய கடைமை அதை விடுத்து வீதியில் உட்கார்ந்து அடுத்தவர்களின் செயலை ஏளனம் பேசுவது அல்ல சமூக அக்கறை ....
களம் காண வேண்டும் இன்றைய இளைஞர்கள் துணிச்சலுடன் ..
கேள்வி ஞானம் பிறக்கவே
அறிவு ஞானம் சிறப்பிக்க முடியும் என்பதை உணர வேண்டும்......
யாரோ ஒருத்தருக்கு ஓட்டு போட்டுட்டோம் அவ்ளோ தான் இனி என்ன செய்தால் என்ன செய்யாமல் போனால் என்ன ன்னு போகும் இளைய சமுதாயமே வா பொறுத்தது போதும் இனியும் மவுனம் காத்தால் உடைமை பறிபோகும்.....
படம் உதவி : பிக்கிலி_ஊராட்சி மன்ற 5 வது மற்றும் 12 வது வார்டு_உறுப்பினர்கள்
உதவி புரிந்த அத்துணை நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த
நன்றி நன்றி நன்றி
Comments
Post a Comment