குரூப் டேப் லிருந்து விடிவுக்காலம் பிறக்குமா 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் மூலம்.....
23/05/2020 சனிக்கிழமை
பிக்கிலி ஊராட்சியில் பொது நிதியில் மூலம் கிடைத்த 50 லட்சத்தில் இரண்டு திறந்தவெளி சமுதாய கிணறுகள் தோண்டப்பட்டு முடிவு நிலையில் உள்ள சமயத்த்தில் மத்திய அரசு தற்போது 15 வது நிதிக்குழு பரிந்துரையின் பேரில் குடிநீர்,சுகாதாரம்,மழைநீர் சேமிப்பு,சமூக காடுகள் போன்ற பயனுள்ள திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள கணிசமான நிதியாக 50 லட்சத்திற்கும் மேல் ஒதுக்கீடு செய்துள்ளது.
இருக்கும் நிதி வைத்து மக்களின் தேவையான குடிநீர் தேவையை முற்றிலும் தீர்க்க படவேண்டும் முடியும்......
மக்களின் பிரச்சினைகளை வலுமிக்க கிராமசபை மூலம் ஒன்றிணைத்து மக்கள் ,வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர், தன்னார்வலர்கள், அனைத்து கட்சி பிரமுகர் ஆகியோரை ஒருங்கிணைத்து விவாதித்து வெளிப்படையாக நிதி அறிவிப்பு கொடுத்து மேலும் மக்களின் பணி சிறக்க வேண்டும் என்று கட்சிசாராகுழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம் நன்றி🙏
Comments
Post a Comment