பிக்கிலி ஊராட்சியின் குளத்தை பதுகாத்திட வேண்டும்
பிக்கிலி ஊராட்சியின் கிராமமான மற்றும் 6வது ஊராட்சி வார்டுகளாக வலம் வரும் 'பூதி நத்தம்' கிராமத்தில் மக்களின் ஆன்மீக பயணத்திற்கென்று காலம் காலமாக ஒரு குளம் இருந்து வந்தன வருகின்றன அதை சரி செய்ய ஊர் இளைஞர்கள் அமைப்பான Dr.APJ அப்துல்கலாம் ஐயாவின் இளைஞர்கள் ஒருங்கிணைப்பால் வட்டாட்சியர் அலுவலரை சந்தித்து நேரில் குளத்திணை தூர் வாரி அதனை பாதுகாப்பாக மேம்படுத்திட வேண்டி முன் வைத்த அந்த கோரிக்கை மனு இன்று வரை கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வட்டாட்சியர் அவர்கள் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு கவன ஈர்ப்பு செய்தாரா இல்லையா என்பது வான வேடிக்கையே......
அந்த குளத்த்தில் வற்றாத நீர் இருந்தது என்பது ஊர் அறிந்த உண்மை அந்த குளத்தில் பிக்கிலி கிராம ஊர் மாரியம்மன் திருவிழாவிற்கு அங்கு வந்து சடங்குகள் செய்வது வழக்கம் கூட....
தற்போது பிக்கிலி ஊராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் யாரும் முன் திட்டமிடலோடு தேர்தல் சந்திக்க வில்லை என்பது வியப்பே....
யார் எதை ஊராட்சி மன்ற பார்வைக்கு கொண்டு சென்றாலும் ஒரே பதில் 6 மாதம் ஆகும் செய்து தருகின்றோம் என்பதை விட பார்க்கலாம் என்ற பதிலே மிக அதிகம் .....
நீர்நிலைகளை பாதுகாக்கும் திட்டம் ஒரு மக்கள் பிரதிநிதிகளிடம் கூட இல்லை என்பது உண்மையே....
உடனடியாக பூதி நத்தம் பொது குளம் பாதுகாத்து அதற்கு மேலும் துரிதப்படுத்த மகாத்மா காந்தி ஊராக வேலை வாய்ப்பு சட்டம் 2005 ன் கீழ் நிதி ஒதுக்கீடு செய்ய கட்சிசாராகுழு முன் வைக்கின்றோம்....
எவ்ளோ அழகாக உள்ளது பூதி நத்தம் நீர்நிலையான குட்டை......
Comments
Post a Comment