தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டம் 2005

தரிசு நிலங்களை, விளை நிலங்களாக மாற்றுவது; மரக்கன்றுகள் நடுவது போன்ற பணிகளை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர், பழனிசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான, தரிசு நிலங்களை, விளை நிலங்களாக மாற்ற விரும்பினால், அதற்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உதவி செய்யலாம். அதேபோல், தனிப்பட்ட நபர்களின் நிலங்களில், மரக்கன்றுகள் நடலாம். செடிகள் நட குழி தோண்டுதல், செடிகள் நடுதல், வேம்பு, தேக்கு, சவுக்கு, மூங்கில், அசோகா, யூக்கலிப்டஸ் போன்ற மரங்களைக் கொண்டு வேலி அமைத்தல் போன்ற பணிகளை, இத்திட்டத்தின் கீழ் செய்யலாம்.

'போர்வெல்' அமைக்கக் கூடாது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், ஐந்து விவசாயிகளை தேர்வு செய்து, அவர்கள் நிலங்களை மேம்படுத்த உதவலாம். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், தோட்டக்கலைத்துறை துணை அல்லது இணை இயக்குனர் இணைந்து, பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர், தோட்டக்கலை, வேளாண், வேளாண் பொறியியல், பட்டுத் துறை அலுவலர்களை அழைத்து ஆலோசித்து, இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலை, வேளாண் துறையில் உள்ள, பல்வேறு திட்ட மானியம் கிடைக்க உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தினமலர் 11.06.2020

ஊரக வேலை திட்டம் பணிகளில் மாற்றம்: இயக்குனர் சுற்றறிக்கை: 

https://m.dinamalar.com/detail.php?id=2555420&device=whatsapp (Sent via Dinamalar.com)


Comments

Popular posts from this blog

புகார் அளித்த 3 நாளில் தீர்வு