தீர்வு இல்லையா பரிதவிக்கும் மக்கள்
ஊராட்சி பிரதிநிதிகள் எதுக்கு ஊராட்சி தேர்தலில் போட்டியிடுகிறோம் எந்த நோக்கத்தோடு உள்ளே வருகிறோம் ன்னு ஒரு நபர்களுக்கு கூட தெளிவாக வில்லை
தலைவர்,வார்டு உறுப்பினர்கள் என்ற இந்த அமைப்பு மக்களுக்காக மக்களின் அதிகாரத்தினை துளியும் மாறாமல் மக்களே தேவைகளை முடிவெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் , மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ஒருபோதும் மக்களை சாதி மதம் ,கட்சி என்று பிரித்து பார்த்திட கூடாது என்று நோக்கத்தில் கட்டமைக்கப்பட்டவை தான் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு அதை கண்ணா பின்னா ன்னு பயன்படுத்துவது தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை கடந்தும் போக முடியவில்லை ......
தான் சார்ந்துள்ள கட்சியினர்களுக்கு இலவச வீடுகள் , குடிநீர் தேவைகள் கட்சியினர் வீட்டுக்கே தனி குழாய் அமைப்பது ,100 நாள் வேளையில் சிறப்பு சலுகைகள் வேலைக்கு வராமலே வருகை வைப்பது , தான் சார்ந்த கட்சி பிரமுகர்களுக்கு காவல் நிலையங்களில் மாமா வேலை பார்ப்பது ன்னு பல வகையில் அதிகாரத்தை துஸ்பிரியோகம் செய்யும் அட்டூழியம் தொடர்கிறது என்பதே.....
..........தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலரின் மன குமுறல் கூட
இங்கே கூத்து கட்டும் பெரும்பாலான உள்ளாட்சி பிரதிநிதிகள் அத்துனை பேரும் கட்சியின் போர்வையில் ஒழிந்து கொண்டு உலாவரும் பசுந்தோல் போர்த்திய புலிகளே....!
கேட்டால் த்ததுவம் வேற கட்சி இல்லாமல் என்ன சாதிக்க முடியும் ன்னு அப்படி உண்மை என்றால் உங்க கட்சிகள் பலத்தை வைத்து உள்ளாட்சி தேர்தலில் ஏன் சுயேட்சை சின்னத்தை கொண்டு போட்டிடுகின்ரீர் கொஞ்சம் சிந்தியுங்கள்.......
ஊராட்சிகளில் மக்களுக்கு தெரிவிக்க தகவலாக அறிவிக்க வேண்டியது பல நூறு நல்ல தகவல் இருக்கும்போது தன்னோட கட்சி பெயரை விளம்பரம் படுத்தும் அவசியம் தான் புரில.........
உள்ளாட்சி அமைப்பை சரியாக புரிந்துகொள்ளாத எந்த கட்சி ஊராட்சி தலைவராலும் வார்டு உறுப்பினர்களால் தன்னோட ஊராட்சியை தன்னிறைவான ஊராட்சியாக மாற்ற முடியாது இது சத்தியம்....
கீழ் கண்ட அறிவிப்பு போல உடனடியாக #தர்மபுரி_மாவட்ட 251 #ஊராட்சிக்கும் அறிவிப்பாக கொடுப்பது மட்டுமின்றி உடனே கட்சி வண்ணங்களை தவிர்த்து அத்துனை அறிவிப்பு பலகையும் மக்களின் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு , ஊராட்சியின் ஓராண்டு திட்டம் , 5 வருட திட்டம் ,ஒவ்வொரு மாதத்தின் வரவு செலவு , கிராமசபை யின் பயன் போன்றவைகள் அறிவிப்பாக கொடுத்திட வேண்டுமாய்
தர்மபுரி_மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளர் (மாவட்ட ஆட்சியர்) அவரின் பார்வைக்கு பிக்கிலி_ஊராட்சி_மக்கள் வளர்ச்சி_சங்கம்
கட்சிசாராகுழு சார்பில் கோரிக்கையாக முன் வைக்கின்றோம்
Comments
Post a Comment