ஊராட்சியின் அந்த மூவர்....

கடந்த சில 3 வருடங்களில் இளைஞர்கள் மத்தியில் ஓரளவுக்கு பேசப்படும்,பகிரப்படும் ஒரு சக்தியாக உருவெடுத்து உள்ள மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் #கிராமசபை ஆகும்.

அதில் பங்கெடுத்த இளைஞர்களுக்கு பெரும்பாலானோர் க்கு தெரியும் சபையில் இருந்து கிடைத்த பதில் கிராமசபை யில் நீ எவ்ளோ தீர்மானம் எழுதினாலும் அது ஒண்ணுமே ஆகாது தம்பி இது வெறும் தீர்மானமே அவ்ளோ தான் நீ இப்போதான் புதுசா வந்திருக்க இந்த கிராமசபைக்கு என்கிற வார்த்தைகள் மிக அதிகமாக கேட்டிருக்க கூடும்.....

சரி அந்த தீர்மானம் வைத்து என்ன தான் செய்றாங்க ன்னு கொஞ்சம் விவரமா பார்த்தால் ஊராட்சியில் உள்ள 9 வங்கி கணக்கு மூலம் அரசாங்கம் செலுத்தும் ஒரு ரூபாய்க்கும் கிராமசபை கூட்டியும் அல்லது மன்ற கூட்டம் கூட்டியும் மக்களிடம் எடுத்துறைக்கப்பட்டும் ஒப்புதலோடு பெற்ற பின்னரே ஒவ்வொரு ரூபாய்யும் வங்கியில் இருந்து பெற முடியும் என்பதை #ஊராட்சிகள்_சட்டம்_1994 மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது என்பதை மறுக்கவோ,மறைக்கவோ முடியாது.....

அந்த சட்டத்தை தன் வசமாக்கி புதிதாக வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு உள்ளே வரும் தலைவர்களுக்கு பழம் தின்னு கொட்டை போட்ட ஊழல் பெருசாலிகள் புது தலைவர்களுக்கு காதில் ஓதும் மந்திரம் எந்த கணக்கில் உள்ள பணத்தை எவ்வாறு சுஹாக செய்ய முடியும் என்கிற தார மந்திரமே ....

இவர்களுக்கு துளியும் இடம் கொடுக்காமல் செயல் படவே ஊராட்சிகளில் துணை தலைவர் என்கிற ஒரு மாபெரும் சக்தியின் கையில் செலவாகும் பணத்தை துல்லியமாக கண்காணிக்க அதனை மேற்பார்வையிட ,கணக்கின் வரவு செலவு,திட்டமிடல்,கூட்டல், பெருக்கல்,கழித்தல் போன்ற அத்துணை செயலையும் தீர தணிக்கை செய்து அதனை அங்கீகரித்து கையொப்பமிட்டு வங்கி கணக்கில் இருந்து பணமாக பெற முக்கிய ஆயுதமாக வைத்துள்ளது #பஞ்சாயத்துராஜ்_அமைப்பு அதனை சரியாக செய்யும் துணை தலைவர்கள் இங்கு விரல் விட்டு எண்ணிட கூட ஆள் இல்லை .....

அதையும் தாண்டி கிராம ஊராட்சியின் அமைப்பு மேலும் பலமாக்கிட வார்டு உறுப்பினர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் தேர்ந்தெடுத்து அதை மிக சரியாக நகர்வு செய்திட ஊராட்சிகள் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது அதை பற்றி துளி அளவும் அறியாதவர்களே பல ஆயிரம் வார்டு உறுப்பினர்கள் இவர்கள் நினைத்தால் தலைவர்,துணை தலைவர்,கிளார்க் செயலாளர் ஆகியோரை மிக சரியாக பயணிக்க முடியும் ஒவ்வொரு நகர்வுக்கும் இந்த உறுப்பினர்கள் ஒப்புதல் மிக முக்கியமான ஒன்று இதை செயலில் இல்லாமல் இருக்க அத்துணை குறுக்கு வழியும் மேற்கொள்ள படுகிறது ஒவ்வொரு ஊராட்சியிலும் என்பதே நான் உணர்ந்த உண்மை உண்மை உண்மை.....

உள்ளாட்சி அமைப்பானது கிராம மக்களுக்காக கட்டமைத்த ஒன்று அதை தன் வீட்டு செல்ல பிராணிகளாக மாற்றி கொண்டது பல கட்சி கலர் வண்ணங்கள்....

    படித்த இளைஞர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் பெருமான்மையாக இருந்தும் பல உயர் படிப்பும்,பல பட்டமும்,பல திறமைகயும், அறிவாற்றல்,சிந்தனை ஆற்றல் ன்னு பளிச்சென்று மின்னும் இளைஞர்களை கிராமங்களில் ஒன்னும் தெரியாத முட்டாள்களாவே எண்ணி வருகின்றனர் ஊராட்சி பிரதிநிதிகள்....

Comments

Popular posts from this blog

புகார் அளித்த 3 நாளில் தீர்வு