வரலாறு : உழவு நிலத்தில் பண்டங்கள் சேமிக்கும் குழி

சென்ற வருட நிகழ்வு

பண்டக் குழி வரலாற்று கள ஆய்வு;
பண்டக் குழிகள் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.

விவசாய நிலங்களை உழும் போதோ அல்லது கிணறுகள் தோண்டும் போதோ இப்
பண்டக் குழிகள் வெளிப்படும்.குறுகிய வாய்ப் பகுதியுடன் கீழே செல்லச் செல்ல  அதிக அகலமாக இக் குழிகள் அமைக்கப்
பட்டிருக்கும்.சில மிகப் பழங்கால வீடுகளிலும் இப்
பண்டக் குழிகள் வீடுகளின் தரைப்பகுதியின்
கீழே இப் பண்டக் குழிகள் அமைக்கப்பட்டி
ருக்கும்.வீட்டை சீரமைக்க தரைப் பகுதியைத்
தோண்டும் பொழுது இப் பண்டக் குழிகள்
வெளியே வரும்.பண்டங்கள் என்றால்
தானியங்கள் என்று பொருள்படும்.விளை
பொருட்கள் என்றும் பொருள்படும்.பண்டம்
என்ற சொல் அனைத்து தமிழ் இலக்கியங்
களிலும் இடம் பெற்றிருக்கும்.பண்டைய
வாணிப முறைகளில் பண்டமாற்று முறையும்
ஒன்று.அத்தகைய பண்டங்களை சேமித்து
வைக்க பண்டைய மக்கள் பயன்படுத்திய
கொள்கலன்கள் வகைகளில் ஒன்றுதான்
பண்டக் குழிகள்.இதன் வாய்ப் பகுதி மிகக்
குறுகியதாகவும் உள்ளே செல்லச் செல்ல
மிக அகன்றும் காணப்படும்.தானியங்கள்
நிரப்பப்பட்டவுடன் வாய்பகுதியின் மேல்
பகுதியில் வைக்கோல் மற்றும் கற்பலகைகள் கொண்டு மூடி அதன் மேல்
மண்ணை பரப்பி விடுவர்.வெளியிலிருந்து
பார்ப்பவர்களுக்கு குழி இருக்கும் அடையாள
மே தெரியாது.
இன்று அப்படி ஒரு பண்டக் குழி 

தருமபுரி
மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி
அருகே பனைய குளம் என்ற தொல் பழங்கால ஊரின் அருகாமையில் உள்ள
மாதேஸ்வரன் மலை அடிவாரத்தில் உள்ள
வயல் ஒன்றை உழும் போது பண்டக் குழி
ஒன்று வெளிப்பட்டதாக அறிந்து தருமபுரி
அதியமான் சமூக வரலாற்று மையத்தின்
சார்பாக ஆய்வு செய்யும் பொருட்டு மையத்
தலைவர் தொல்லியல் துறை முன்னாள்
துணை இயக்குநரும் தொல்லியல் அறிஞருமான முனைவர் தி.சுப்பிரமணியம்
அவர்களுடன் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உடன் வள்ளூர் தொல்லியல்
மன்ற பொறுப்பாளர்களான ஆசிரியர் திரு.
தமிழரசன் மற்றும் பசுமை மன்ற உறுப்பினரான ஆறுமுகம் ஆகியோரும் இந்த
ஆய்வில் கலந்து கொண்டனர்.
பனையகுளம் தொல்லியல் சின்னங்கள்
கிடைத்த ஊராகும்.பல ஆண்டுகளுக்கு முன்
தமிழக தொல்லியல் துறையின் சார்பாக
பனையகுளம் மண்டு பகுதியில் அகழாய்வு
மேற் கொள்ளப்பட்டது.அகழாய்வில் சில
சுடுமண் பொம்மைகளும் பானை ஓடுகளும்
புகைப்பான்களும் கல்லாயுதங்களும் கண்
டெடுக்கப்பட்டன.பனையகுளத்தில் சமணப்
பள்ளி இருந்ததாக பாலக்கோடு அருகே
உள்ள குண்டூரப்பன் கொட்டாய் கல்வெட்டு
தெரிவிக்கின்றது.பண்டக் குழி இருந்த பகுதிக்கும் பனைய குளம் ஊருக்கும் இடையே சுமார் 2 கி.மீ.தொலைவு உள்ளது.
குழி உள்ள பகுதியில் பானை ஓடுகள்
எதுவும் தென்படவில்லை.எனவே இது
ஈமக் காடாக இருக்க வாய்ப்பு இல்லை.
மலைமேல் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த
மக்கள் சமவெளிக்கு நகர்ந்து பனையகுளம்
பகுதியில் குடியேறி இருக்க வேண்டும்.பின்னர் மலை அடிவாரத்தில்
உள்ள காடுகளை விளை நிலங்களாக
மாற்றியிருக்கலாம்.எளிய கூரை கல் வீடுகளில் வாழ்ந்த அவர்கள்  தானியங்களை
சேமித்து வைக்க பாதுகாப்பான இப் பண்டக்
குழிகளை அமைத்துள்ளனர்.

இக் குழி
10 அடி ஆழமும் அதே அளவு விட்டம் கொண்ட
தாய் அமைக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

புகார் அளித்த 3 நாளில் தீர்வு