Posts

Showing posts from May, 2020

அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களின் குறியீடு...

Image
அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண் என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள். அதனை நீங்களும் பார்த்திருக்கலாம். இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும். ஆனால்,  அதன் அருகில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? என்பது பல பேருக்குத் தெரியாது.  1. ந.க எண் என்றால், நடப்புக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் 2. ஓ.மு. எண் என்றால், ஓராண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் 3. மூ.மு எண் என்றால்  மூன்றாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் 4. நி.மு. எண் என்றால் நிரந்தர முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் 5. ப.மு. எண் என்றால், பத்தாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம். 6. தொ.மு எண் என்றால், தொகுப்பு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் 7.ப.வெ எண் என்றால்  பருவ வெளியீடு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் 8. நே.மு.க எண் என்றால்,  நேர்முகக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் மேற்கண்ட வார்த்தைகளில் ந.க.எண்  (நடப்புக் கணக்கு எண்) மட்டுமே அத...

சேவை செய்ய ஊராட்சி தலைவர்

ஊராட்சி தலைவருக்கோ, வார்டு உறுப்பினர்களுக்கோ அரசு சம்பளம் கிடையாது...ஏன்னா இவர்களின் பணி என்பது வேலை அல்ல சேவை என்பதாகும்..  அரசாணை நிலைஎண்.54(29.6.2012) அன்று அரசு ஒரு அரசாணை வெளியிட்டது.!  ஊராட்சிதலைவரின் பொறுப்புணர்வு பணிகளை உணர்ந்து அவருக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.1000ம், மாதம் இரண்டு கூட்டமாவது போட வேண்டும் . அக்கூட்டத்திற்கு தலா ரூ.200என்றவீதம்..400ரூ வழங்கப்படும். மொத்தமாக ஊராட்சிதலைவருக்கு பயணிபடி எல்லாம் சேர்த்து மாதம் #ரூ_1400 ஊக்கதொகையாக வழங்கப்படுகிறது.  ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 2012முன்பு ஊக்கத்தொகையாக ரூ.25 மட்டுமே வழங்கப்பட்டது.  பின்2012 அரசானைபடி ஊக்கதொகையாக ரூ.50ம் கூட்டத்திற்கு தலா 50ரூம் வழங்கப்படுகிறது.. மொத்தம். #150ரூ மட்டுமே...  ஊராட்சி செயலர் அரசு அதிகாரி ஊ(ழ)ழியர் ஆவதால் அவருக்கு அரசு சம்பளமாகவே #ரூ_18900 வழங்குகிறது.

நபார்டு மூலம் மானியத்துடன் பால்பண்ணை கடன்...

Image
மானியத்துடன் பால்பண்ணை  கடன்...! திட்டம் பற்றிய விபரம் :- ************************ 💰 இந்த திட்டமானது மாட்டு பண்ணை வைக்க நபார்டு (Nabard) வங்கியின் மூலம் கடன் வழங்குவதாகும். 💰 இந்த திட்டத்தில் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க 6 லட்சம் வரை கடன் பெறலாம். யாரெல்லாம் கடன் பெறலாம்...? ********************************* 💰 விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள். 💰 ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட இத்திட்டத்தில் கடன் பெறலாம். 💰 ஆனால் அவர்களின் பண்ணை 500 மீட்டருக்கு மேல் தள்ளி இருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் கடன் பெறலாம். நபார்டு வழங்கும் கடன் திட்டங்கள் :- ************************************** 💰 இந்த திட்டத்தில் பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25% மானியம் பெறலாம். தாழ்த்தப்பட்டோர் 33.33% மானியம் பெறலாம். 💰 சிறிய மாட்டு பண்ணைகள் அமைக்க கடன் பெற்ற பின் (Back Ended Subsidy) வழங்கப்படும். 💰 கன்று குட்டிகள் வளர்க்கும் திட்டத்தில் 20 கன்று குட்டிகள் வரை வாங்கலாம். இதற்கு ரூ.5.30 லட்சம் வரை கடன் பெறல...

பிக்கிலி ஊராட்சியின் நீர்நிலை மேம்பட

Image
நம்ம_ஊராட்சியில்_இதுபோல்_ஏன் செய்ய_கூடாது.  முயற்சி_செய்வோம். நல்ல முயற்சி நல்ல தகவல் பாராட்டுக்கள். என்றும் மக்களுக்காக, மக்கள் நலனில், ஊராட்சி மேம்பட தனிக் கவனத்துடன் செயல்படுவதற்கு சான்றுகள் ஊராட்சி மன்ற தலைவர்  அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் .....  கால்வாய்களில் இப்படி ஒரு கட்டமைப்பை செய்தால் நிலத்தடிநீர் உயரும் நகரப்பகுதிகளில் வீனாகும் நீரும் சேமிக்கப்படும் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் உள்ளவர்கள் முயற்சி செய்யலாம்... நீர்நிலை மேம்படுத்த கட்சிசாராகுழு களத்தில்...... 

பிக்கிலி ஊராட்சியின் நடைமுறை தேவைகள்.....

Image
பிக்கிலி ஊராட்சியின் நடைமுறை தேவைகள் பட்டியல் ----------------------- (1)கிராம ஊராட்சி அலுவலகம் (2)பள்ளிக்கூடம் (3)நியாய விலைக் கடை (4)அங்கன்வாடி (5)தாய் சேய் துணை சுகாதார நிலையம் (6)தபால் நிலையம்  (7)விவசாய சேவை தகவல் மையம் (8)மகளிர் ஆண்கள் சுகாதார வளாகம் (9)கிராம பொது இ-சேவை மையம் (10)சுய உதவிக்குழு கட்டிடம் (11)கிராம வறுமை ஒழிப்பு சங்கம் (12)பால் கொள்முதல் நிலையம் (13)பேருந்து நிறுத்தம் (14)கிராமச் சந்தை  (15)திடக்கழிவு மேலாண்மை கொட்டகை (16)மண்புழு உரம் உற்பத்தி கொட்டகை.. 17)விவசாய தானியம் களம்  18)நூலகம் கட்டிடம்  19)ஊராட்சி தகவல் மையம்  20)விவசாயிகள் தானிய கிடங்குகள் . 21) பொது விளையாட்டு மைதானம்

ஊரடங்கு மின் கட்டண விவரம்

Image
கொரனா ஊரடங்கு கால மின் கட்டணத்தை செலுத்துவதில் சிலருக்கு குழப்பங்கள் இருக்கலாம். அதனை தெளிவு படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உதாரண கணக்கீடுகளுடன் அளித்துள்ள விளக்கத்தினை பொது மக்கள் நலன் கருதி வெளியிடப்படுகின்றது. நன்றி தோழர் Basheer Acf

பிக்கிலி ஊராட்சியின் குளத்தை பதுகாத்திட வேண்டும்

Image
பிக்கிலி ஊராட்சியின் கிராமமான மற்றும் 6வது ஊராட்சி வார்டுகளாக வலம் வரும் 'பூதி நத்தம்' கிராமத்தில் மக்களின் ஆன்மீக பயணத்திற்கென்று காலம் காலமாக ஒரு குளம் இருந்து வந்தன வருகின்றன அதை சரி செய்ய ஊர் இளைஞர்கள் அமைப்பான Dr.APJ அப்துல்கலாம் ஐயாவின் இளைஞர்கள் ஒருங்கிணைப்பால் வட்டாட்சியர் அலுவலரை சந்தித்து நேரில் குளத்திணை தூர் வாரி அதனை பாதுகாப்பாக மேம்படுத்திட வேண்டி முன் வைத்த அந்த கோரிக்கை மனு இன்று வரை கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. வட்டாட்சியர் அவர்கள் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு கவன ஈர்ப்பு செய்தாரா இல்லையா என்பது வான வேடிக்கையே...... அந்த குளத்த்தில் வற்றாத நீர் இருந்தது என்பது ஊர் அறிந்த உண்மை அந்த குளத்தில் பிக்கிலி கிராம ஊர் மாரியம்மன் திருவிழாவிற்கு அங்கு வந்து சடங்குகள் செய்வது வழக்கம் கூட.... தற்போது பிக்கிலி ஊராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் யாரும் முன் திட்டமிடலோடு தேர்தல் சந்திக்க வில்லை என்பது வியப்பே.... யார் எதை ஊராட்சி மன்ற பார்வைக்கு கொண்டு சென்றாலும் ஒரே பதில் 6 மாதம் ஆகும் செய்து தருகின்றோம் என்பதை விட பார்க்கலாம் என்ற பதிலே மிக அதிகம் ........

குரூப் டேப் லிருந்து விடிவுக்காலம் பிறக்குமா 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் மூலம்.....

Image
23/05/2020 சனிக்கிழமை  எதிர்வரும் நாட்களில் 2020 வருடத்தை கடந்தும் இன்னும் குடிநீருக்காக அங்கும் இங்குமாய் சுற்றி திரியும் நிலை மாறிட கூடாதா என்று தினம் தினம் மக்கள் கவலைக்கு முடிவு வராதா? பிக்கிலி ஊராட்சியில் பொது நிதியில் மூலம் கிடைத்த 50 லட்சத்தில் இரண்டு திறந்தவெளி சமுதாய கிணறுகள் தோண்டப்பட்டு முடிவு நிலையில் உள்ள சமயத்த்தில் மத்திய அரசு தற்போது 15 வது நிதிக்குழு பரிந்துரையின் பேரில் குடிநீர்,சுகாதாரம்,மழைநீர் சேமிப்பு,சமூக காடுகள் போன்ற பயனுள்ள திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள கணிசமான நிதியாக 50 லட்சத்திற்கும் மேல் ஒதுக்கீடு செய்துள்ளது. இருக்கும் நிதி வைத்து மக்களின் தேவையான குடிநீர் தேவையை முற்றிலும் தீர்க்க படவேண்டும் முடியும்...... மக்களின் பிரச்சினைகளை வலுமிக்க கிராமசபை மூலம் ஒன்றிணைத்து மக்கள் ,வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர், தன்னார்வலர்கள், அனைத்து கட்சி பிரமுகர் ஆகியோரை ஒருங்கிணைத்து விவாதித்து வெளிப்படையாக நிதி அறிவிப்பு கொடுத்து மேலும் மக்களின் பணி சிறக்க வேண்டும் என்று கட்சிசாராகுழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம் நன்றி🙏

15வது நிதிக்குழு மானிய நிதி ஒதுக்கீடு

Image
  15 வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளாக சுமார் 50 லட்சத்திற்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.... குடிநீர் பிரச்சினை தீர்வு மழை நீர் சேமிப்பு சுகாதாரம் மூலதன வேலைகள்  https://drive.google.com/file/d/1Ai6JJzwLSDnWmyzaYHoGrkJotp0gQFaL/view?usp=drivesdk https://drive.google.com/file/d/1WicpcUkWym0u9FNCmQuoa0qQlJ0PDJRj/view?usp=drivesdk PPPDA

பிக்கிலி ஊராட்சி மக்கள் வளர்ச்சி சங்கம்

Image
      தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் பிக்கிலி ஊராட்சி பகுதியின் மக்களின் அடிப்படை தேவை மிக எளிதில் அணுகுவதில் சிரமமின்றி அதற்கு நிரந்தர தீர்வாக அமையும் எனில் அதுவே மக்களின் வளர்ச்சிக்கு முதல் ஆரம்பம் ஆகும்.....