Posts

Showing posts from June, 2020

புகார் அளித்த 3 நாளில் தீர்வு

Image
பிக்கிலி ஊராட்சியில் ஜூன் 15 அன்று கொடுத்த புகார் பிக்கிலி ஊராட்சியில் மூன்று இடங்களில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள வழியில் மின்சார கம்பங்கள் உடைந்து காணப்பட்ட கம்பங்கள் தற்போது சரிசெய்யப்பட்டது படம் 1 : பிக்கிலி ஊராட்சி மலையூர் 12 வது வார்டு வடக்கு வீதி மாரியம்மன் கோவில் அருகில். படம் 2 : பிக்கிலி அரசு துவக்கப்பள்ளி பின் புறம். படம் 3 : பிக்கிலி புதூர் மாரியம்மன் கோவில் அருகில். 👇👇👇👇👇👇👇  பல நாட்களாக பழுதாகி மக்கள் நடமாடும் கோவில் அருகிலும் பள்ளி அருகிலும் மின் இணைப்பு சிமெண்ட் கம்பங்கள் உடந்துள்ளதை பிக்கிலி ஊராட்சி மலையூர் வார்டு உறுப்பினர் திருமதி புவனேஸ்வரி அவர்களும் கோபால்சாமி நாடக கலை குழு மேனேஜரும் ஜி.சின்னசாமி அவர்களும் அதேபோல் பிக்கிலி சார்ந்த சமூக அக்கறையாளர் இளைஞர்கள் விஜயகுமார் அவர்களும் பழுதான கம்பத்தின் புகைப்படங்களுடன்  பிக்கிலி_ஊராட்சி_மக்கள்_வளர்ச்சி_சங்கத்தின் பார்வைக்கு கொண்டு வரும் பட்சத்தில் அதனை வேலூர் மண்டல மின் பகிர்மான பொறியாளர் பார்வைக்கு நியூஸ்7 ரிப்போர்ட்டர் அவரின் துணையோடு கொண்டு சென்றோம்  ஜூன் 19 ம் தேதி அன்றே ...

கொரோணா (vs) கிராம ஊராட்சியில் வளர்ச்சிக்குழு

Image
ஒவ்வொரு ஊராட்சியிலும் உடனே நிறைவேற்றிட வேண்டிய ஒன்று தலைவர்,து தலைவர்,ஊராட்சி செயலாளர்,உறுப்பினர்கள் அவசரகாலம் கருதி விரைந்து அரசாணை102 ன் படி வளர்ச்சிக்குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம்..... அக்குழுவை கொண்டு மக்களை நேரடியாக வீட்டில் வைத்து எச்சரிக்கை அறிவுறுத்தல்,மருத்துவம் கொடுக்க முடியும் இக்குழு கீழ்க்கண்டவாறு அமையும்... வளர்ச்சிக்குழு – உறுப்பினர்கள்   கிராம ஊராட்சியின் 2 உறுப்பினர்கள ;  சத்துணவு அமைப்பாளர்  தொடக்கஃநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்  சுயஉதவிக் குழு உறுப்பினர் அல்லது பிரதிநிதி  ஒரு சமூக ஆர்வலர்கள் (அ) அரசு சாரா தொண்டு நிறுவன அமைப்பாளர்  கிராம சுகாதார செவிலியர்  ஊர் நல அலுவலர்  தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க செயலாளர் ஊராட்சியின் பெண் வார்டு உறுப்பினர்களில் ஒருவர் இக்குழுவிற்குத் தலைவராவார். இக்குழுவின் பணிகள்  மக்கள் நலம் சுகாதாரம் குடிநீர் சமுதாய சொத்துக்கள் ஆகியவற்றின் பராமரிப்பு மற்றும் தரம்  உயர்த துதல்  தொற்றுநோய் பரவாமல் தடுக்க பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்களை  மேற்பார்வையிடுதல்  நோய்த்தடுப...

கிராமசபை

Image
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, சட்டப்பிரிவு2(13),சட்டப்பிரிவு(3)-ன் படி , தொடர்புடைய கிராம ஊராட்சிகள் பரப்பிற்குள் அடங்கிய,வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட நபர்களை கொண்ட ஒரு அமைப்பாக கிராமசபை ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ளது... மிக சரியான புரிதலுடன் இளைஞர்கள் கையாள வேண்டும் சாமானியன் MvkMuthu

ஊராட்சியின் அந்த மூவர்....

Image
கடந்த சில 3 வருடங்களில் இளைஞர்கள் மத்தியில் ஓரளவுக்கு பேசப்படும்,பகிரப்படும் ஒரு சக்தியாக உருவெடுத்து உள்ள மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் # கிராமசபை ஆகும். அதில் பங்கெடுத்த இளைஞர்களுக்கு பெரும்பாலானோர் க்கு தெரியும் சபையில் இருந்து கிடைத்த பதில் கிராமசபை யில் நீ எவ்ளோ தீர்மானம் எழுதினாலும் அது ஒண்ணுமே ஆகாது தம்பி இது வெறும் தீர்மானமே அவ்ளோ தான் நீ இப்போதான் புதுசா வந்திருக்க இந்த கிராமசபைக்கு என்கிற வார்த்தைகள் மிக அதிகமாக கேட்டிருக்க கூடும்..... சரி அந்த தீர்மானம் வைத்து என்ன தான் செய்றாங்க ன்னு கொஞ்சம் விவரமா பார்த்தால் ஊராட்சியில் உள்ள 9 வங்கி கணக்கு மூலம் அரசாங்கம் செலுத்தும் ஒரு ரூபாய்க்கும் கிராமசபை கூட்டியும் அல்லது மன்ற கூட்டம் கூட்டியும் மக்களிடம் எடுத்துறைக்கப்பட்டும் ஒப்புதலோடு பெற்ற பின்னரே ஒவ்வொரு ரூபாய்யும் வங்கியில் இருந்து பெற முடியும் என்பதை # ஊராட்சிகள்_சட்டம்_1994 மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது என்பதை மறுக்கவோ,மறைக்கவோ முடியாது..... அந்த சட்டத்தை தன் வசமாக்கி புதிதாக வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு உள்ளே வரும் தலைவர்களுக்கு பழம் தின்னு கொட்டை போட்ட ஊழல் பெர...

பிக்கிலி ஊராட்சி

Image
பிக்கிலி ஊராட்சி குறித்து அருமையான பதிவேற்றம் இணையத்தில் http://www.onefivenine.com/india/villages/Dharmapuri/Pennagaram/Pikkili பிக்கிலி ஊராட்சியின் மக்கள் தொகை விவரம்

தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டம் 2005

Image
தரிசு நிலங்களை, விளை நிலங்களாக மாற்றுவது; மரக்கன்றுகள் நடுவது போன்ற பணிகளை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர், பழனிசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான, தரிசு நிலங்களை, விளை நிலங்களாக மாற்ற விரும்பினால், அதற்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உதவி செய்யலாம். அதேபோல், தனிப்பட்ட நபர்களின் நிலங்களில், மரக்கன்றுகள் நடலாம். செடிகள் நட குழி தோண்டுதல், செடிகள் நடுதல், வேம்பு, தேக்கு, சவுக்கு, மூங்கில், அசோகா, யூக்கலிப்டஸ் போன்ற மரங்களைக் கொண்டு வேலி அமைத்தல் போன்ற பணிகளை, இத்திட்டத்தின் கீழ் செய்யலாம். 'போர்வெல்' அமைக்கக் கூடாது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், ஐந்து விவசாயிகளை தேர்வு செய்து, அவர்கள் நிலங்களை மேம்படுத்த உதவலாம். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், தோட்டக்கலைத்துறை துணை அல்லது இணை இயக்குனர் இணைந்து, பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர், தோட்டக்கலை, வேளாண், வேளாண் பொறியியல், பட்டுத் துறை அலுவலர்களை அழைத்து ஆ...

கிராம வளர்ச்சி திட்டம்

Image
gpdp மாதிரி கிராம வளர்ச்சி திட்டம் GPDP (Gram Panchayat Development Plan) கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப் பணிகள் (அனைத்துறை பணிகள் உட்பட) கிராம சபையில் அங்கிகரிக்கப்பட்டு, அப்பணிகளின் விபரம், மற்றும் கிராம சபை தீர்மான பதிவேடு நகல் (ஸ்கேனிங் செய்து பதிவேற்றம் செய்தல்) Plan plus இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மேற்கண்ட வழிமுறை படி Plan plus ல் பதிவேற்றம் செய்யப்பட்ட பணிகள் மட்டுமே செயல்படுத்த இயலும் என்பதால் கிராம வளர்ச்சி திட்ட அறிக்கை ஒப்புதலுக்காக நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பணிகளின் பட்டியல் விடுபாடின்றி  தயார் செய்து கிராம சபை கூட்ட பதிவேட்டில் பதிவு செய்து அதன் நகல் வட்டார அலுவலகத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டிட தெரிவிக்கப்படுகிறது. (இப்பணிகள் தேர்வு செய்கையில்  மினி Tank (சின் டெக்ஸ்) பணியினை தவிர்த்து அதற்கு பதிலாக மற்ற குடிநீர் பணிகளை தேர்வு செய்யலாம் .  ஊராட்சியின் அனைத்து பகுதிகளின் தேவைக்கு ஏற்ப பணிகளின் பட்டியலை தயார் செய்திட தெரிவிக்கப்படுகிறது. பணி மாதிரிகள் கீழே சில தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை...

கிராம வரைடம்

Image
நண்பர்களே அறிவீர்களா ? நீர்நிலைகளை பாதுகாக்க அதை மீட்க நம்மிடத்தில் இருக்க வேண்டிய முக்கியமான ஆயுதம்.... #கிராம_வரைபடம் வரைபடத்தின் மூலம் நமது கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான நீர் நிலைகள் ( குளம்,குட்டை,கால்வாய், கண்மாய்,மடுவு,ஏரி மற்றும் ஆறு ) அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிய கிராம வரைபடம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் “அ” பதிவேடுகளில் உள்ள விவரங்களை ஒப்பிட்டு ஆக்கிரமிப்புகளை கண்டறிய முடியும். மறக்காமல்_வாங்கிடுங்க_மண்ணை_காத்திடுங்க வரைபடம் கிடைக்கும் இடம்... Survey house Chennai நில அளவை ஆணையம் சேப்பாக்கம்.. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில்...

ஊராட்சியின் பதிவேடுகள் பராமரிப்பு

Image
ஊராட்சியில் கீ்ழ்காணும் பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது 1.வீட்டு வரி டிமாண்டு நோட்டீஸ் 2.வீட்டு வரி ரசீது புத்தகம் 3.வீட்டு வரி கேட்பு பதிவேடு 4.தொழில் வரி ரசீது 5.தொழில் வரி(நிலுவை மற்றும் நடப்பு) கேட்பு பதிவேடு 6.பல்வகை வரவு ரசீது பதிவேடு 7.ஊராட்சி வரிகள் மற்றும் பல்வகை வரவு வசூல் ரசீது 8.ஊராட்சிக்கு வரப்பெற்ற அரசு மானியங்கள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட வரவினங்கள் 9.சிட்டா 10..ஊராட்சியின் பல்வகை கேட்பு வசூல் மற்றும் நிலுவை பதிவேடு 11.ரொக்கப்பதிவேடு(ஊராட்சி நிதி) 12.ஊராட்சி முன்பணம் பதிவேடு 13.தலைப்பு வாாியாக ஒப்புதல் அளிக்கப்பட்ட பட்டியல் பதிவேடு 14.தொகை ஏற்பளிப்பு பதிவேடு 15.ஊராட்சியால் செய்யப்படும் வேலைகளின் மதிப்பீடு மற்றும் ஒதுக்கீடு பதிவேடு-ஆண்டு 16..ஊராட்சியின் சொத்துக்கள் மற்றும் தளவாட சாமான்கள் பதிவேடு 17.கைப்பம்பு,நீா்தேக்கத்தொட்டி,விசைப்பம்பு மற்றும்  தெரு குடிநீா் விநியோகக் குழாய்கள் பராமரிப்பு, தெரு விளக்குகள், சாலை பராமரிப்பு பதிவேடு 18.மின் உபகரணங்கள்,கைப்பம்பு உதிரி பாகங்கள்,சுகாதார பொருட்கள் மற்றும் அன்றாட உபயோகப் பொருட்கள் இருப்பு பதிவேடு 19.செலவினச் சீட்ட...

பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படும் பொட்டாஷ் உரத்தின் விலை குறைந்துள்ளது

Image
பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படும் பொட்டாஷ் உரத்தின் விலை குறைந்துள்ளது.    May/2020 தற்போது உள்ள ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் (IPL)  நிறுவனம்  தனது பொட்டாஷ் உரம் மூட்டை ஒன்றின் முந்தைய விலையான ரூ 950 லிருந்து ரூ 75 குறைத்து தற்போது ஒரு மூட்டையின் விலை ரூ.875 என நிர்ணயம்  செய்து விற்பனை செய்ய உள்ளது.  இந்த விலை குறைப்பு மே மாதம் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  அணுகவும் ; வேளாண்மை_துறை

வரலாறு : உழவு நிலத்தில் பண்டங்கள் சேமிக்கும் குழி

Image
சென்ற வருட நிகழ்வு பண்டக் குழி வரலாற்று கள ஆய்வு; பண்டக் குழிகள் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். விவசாய நிலங்களை உழும் போதோ அல்லது கிணறுகள் தோண்டும் போதோ இப் பண்டக் குழிகள் வெளிப்படும்.குறுகிய வாய்ப் பகுதியுடன் கீழே செல்லச் செல்ல  அதிக அகலமாக இக் குழிகள் அமைக்கப் பட்டிருக்கும்.சில மிகப் பழங்கால வீடுகளிலும் இப் பண்டக் குழிகள் வீடுகளின் தரைப்பகுதியின் கீழே இப் பண்டக் குழிகள் அமைக்கப்பட்டி ருக்கும்.வீட்டை சீரமைக்க தரைப் பகுதியைத் தோண்டும் பொழுது இப் பண்டக் குழிகள் வெளியே வரும்.பண்டங்கள் என்றால் தானியங்கள் என்று பொருள்படும்.விளை பொருட்கள் என்றும் பொருள்படும்.பண்டம் என்ற சொல் அனைத்து தமிழ் இலக்கியங் களிலும் இடம் பெற்றிருக்கும்.பண்டைய வாணிப முறைகளில் பண்டமாற்று முறையும் ஒன்று.அத்தகைய பண்டங்களை சேமித்து வைக்க பண்டைய மக்கள் பயன்படுத்திய கொள்கலன்கள் வகைகளில் ஒன்றுதான் பண்டக் குழிகள்.இதன் வாய்ப் பகுதி மிகக் குறுகியதாகவும் உள்ளே செல்லச் செல்ல மிக அகன்றும் காணப்படும்.தானியங்கள் நிரப்பப்பட்டவுடன் வாய்பகுதியின் மேல் பகுதியில் வைக்கோல் மற்றும் கற்பலகைகள் கொண்டு மூடி அதன் மேல் மண்ணை பரப்பி விடுவர்.வ...

தீர்வு இல்லையா பரிதவிக்கும் மக்கள்

Image
ஊராட்சி பிரதிநிதிகள் எதுக்கு ஊராட்சி தேர்தலில் போட்டியிடுகிறோம் எந்த நோக்கத்தோடு உள்ளே வருகிறோம் ன்னு ஒரு நபர்களுக்கு கூட தெளிவாக வில்லை தலைவர்,வார்டு உறுப்பினர்கள் என்ற இந்த அமைப்பு மக்களுக்காக மக்களின் அதிகாரத்தினை துளியும் மாறாமல் மக்களே தேவைகளை முடிவெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் , மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ஒருபோதும் மக்களை சாதி மதம் ,கட்சி என்று பிரித்து பார்த்திட கூடாது என்று நோக்கத்தில் கட்டமைக்கப்பட்டவை தான் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு அதை கண்ணா பின்னா ன்னு பயன்படுத்துவது தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை கடந்தும் போக முடியவில்லை ...... தான் சார்ந்துள்ள கட்சியினர்களுக்கு இலவச வீடுகள் , குடிநீர் தேவைகள் கட்சியினர் வீட்டுக்கே தனி குழாய் அமைப்பது ,100 நாள் வேளையில் சிறப்பு சலுகைகள் வேலைக்கு வராமலே வருகை வைப்பது , தான் சார்ந்த கட்சி பிரமுகர்களுக்கு காவல் நிலையங்களில் மாமா வேலை பார்ப்பது ன்னு பல வகையில் அதிகாரத்தை துஸ்பிரியோகம் செய்யும் அட்டூழியம் தொடர்கிறது என்பதே..... ..........தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலரின் மன குமுறல் கூட இங்கே கூத்து கட்டும் பெரும்பாலான உ...